Wednesday, 17 September 2014

ஏன் போர் ?

இரத்தத்தால் ஒன்று படா விட்டாலும்
நீ வேறு இல்லை நான் வேறு இல்லை;
மதத்தால் ஒன்று சேரா விட்டாலும்
நீ வேறு இல்லை நான் வேறு இல்லை;
பேசும் மொழி வேறு பட்டாலும்
பேசும் திறன் மனிதனுக்கே உறியது அல்லவா;
வசிக்கும் நாடு வேறு பாட்டாலும்
வசிக்கும் முறை ஒன்று அல்லவா;
என் நாடு என்ற பட்டத்தில் படை எடுக்கிறோம்
என் மதம் என்ற அறிவின்மையில் அறம் இழக்கிறோம்;
நாம் உடம்பும் இல்லை மனமும் இல்லை
பிறகு ஏன் இவை அனைத்தும் ?

து.சி.வில்லழகன்